சரித்திரப் படம் இயக்கலை - பிரபுதேவா
தெலுங்கில் ஹிட்டாகும் படங்களை இந்தியில் ரீமேக் செய்து வெற்றியை பைபாஸில் பறித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. வான்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா போன்று டிசம்பர் 5 வெளியாகவிருக்கும் அவரது ஆக்ஷன் ஜாக்சன் படமும் தெலுங்கு தூக்குடு படத்தின் ரீமேக் என்கிறார்கள்.
இந்நிலையில் ராம் சரண் தேஜாவுக்கும், காஜலுக்கும் பிரேக் தந்த மகாதீரா படத்தை இந்தியில் பிரபுதேவா ரீமேக் செய்கிறார் என்று பேச்சு. மகாதீராவை ராஜமௌலி இயக்கியிருந்தார். அவரது வழமையான கமர்ஷியல் கும்பமேளா. படம் வசூலை வாரிக்குவித்தது.
ஆனால், மகாதீராவை ரீமேக் செய்யவில்லை என்று பிரபுதேவா விளக்கமளித்துள்ளார். சரித்திரப் படத்தை ரீமேக் செய்ய தென்னாட்டு ஜாக்சனுக்கு ஏதோ விருப்பக் குறைவு.
ஆக்ஷன் ஜாக்சனைத் தொடர்ந்து பிரபுதேவா அக்ஷய் குமாரை வைத்து இயக்கியிருக்கும் சிங் இஸ் பிளிங் படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ConversionConversion EmoticonEmoticon